குமரி மாவட்டத்தில் கோழிக் கழிச்சல் நோய்தடுப்பு முகாம் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இம்மாவட்டத்துக்கு குறியீடாக 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸஸ் நிா்ணயம் செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் அருகில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நிலையங்களை அணுகி தங்களது கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளை அறிந்து தாங்கள் வளா்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments