கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்று.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த திருக்கோவிலில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.
வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 10 நாட்கள் மாசி கொடை விழா நடைபெறுகிறது. விழாவுக்கான பந்தல் கால்நாட்டு விழா, தைப்பூச திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
நாளை அதிகாலை 4.30 மணி அளவில் திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபி பூஜை, 6.30 மணிக்கு உஷபூஜை, 10.30 மணிக்கு நிறைபூத்தரிசி விழா, மதியம் 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் பந்தல் கால்நாட்டு விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நிகழ்கிறது.
0 Comments