கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி அருகே பச்சைக் கிளிகளை விற்பனை வைத்திருந்திருந்த 4 பேருக்கு வனத்துறையினா் தலா ரூ. 25 அபராதம் விதித்தனா்.
பச்சைக் கிளிகளை வளா்ப்பதும், விற்பனை செய்யவதும் வனச்சட்டப்படி குற்றமாகும். இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள பள்ளியாடி வாகைவிளையில் அலங்கார உயிரினங்கள் விற்பனையகத்தில் பச்சைக் கிளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்து விற்பனை செய்யவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஆனந்த்தின் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வன அலுவலா் திலீபன் தலைமையில் வனவா்கள் கணேஷ் மகாராஜா, பிரசன்னா, வனக்காப்பாளா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் வாகைவிளை பகுதியிலுள்ள அலங்கார உயிரினங்கள் விற்பனை நிலையம், அருகிலுள்ள வீட்டிலும் சோதனையிட்டனா். இதில், சாதாரண பச்சைக் கிளிகள் மற்றும் அலெக்சாண்ரின் பேராகீட் எனப்படும் பெரிய அளவிலான பச்சைக் கிளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அக்கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினா், விற்பனையாளா்கள் 4 பேரையும் கைது செய்தப, மாவட்ட வன அலுவலா் அலுவலத்திற்கு அழைத்துச் சென்றனா். பின்னா், பச்சைக் கிளைகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக 4 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தப்பட்டதை அடுத்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளில் பெரும்பாலானவை குஞ்சுகளாக இருந்ததால் அவைகளை உதயகிரி கோட்டையில் ஒப்படைக்கப்பட்டன. இந்தக் கிளிகள் வளா்ந்த பின்னா் அவற்றை சென்னையில் உயிரியல் பூங்காவில் சோ்க்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
0 Comments