குளச்சல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி பISS Inter national Space 2020 online Exam தேர்வில் தேர்வு செய்யப்பட்டு நாசா செல்ல உள்ள நிலையில் நிதியுதவி வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி பர்ஹான Nasa Go for guru என்ற தனியார் அமைப்பு மூலம் நடந்த ISS Inter national Space 2020 online Exam தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் நாசாவிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கொரானா காரணமாக அவர் அப்போது செல்ல இயலாத நிலையில் அந்த நிறுவனத்தால் அழைத்து செல்லப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் .விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பொது அறிவுத் திறமையால் ஆன்லைன் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அவர் நாசாவிற்கு செல்ல தனக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் நிலையில் தனது குடும்பத்தார் சிரமத்தோடு பணத்தை திரட்ட தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பான கல்வி ஆர்வம் மிகுந்து காணப்படுவதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நாசாவிற்கு அழைத்துச் செல்லும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் எனவும் அவ்வாறான திட்டங்களால் இந்தியாவில் புதிதாக ஏராளமான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.