குளச்சல் துறைமுகம் தமிழ்நாட்டிலுள்ள முன்மொழியப்பட்ட துறைமுகங்களில் ஒன்றாகும்.[1]. தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இத்துறைமுகத்தை ஒன்றிய அரசு ஏற்று, கடல் மாலை திட்டத்தின் கீழ் ரூ 21,000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சியை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் படை வென்றது. இதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றி தூண் இன்றளவும் குளச்சலில் உள்ளது.
0 Comments