தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் குளச்சலில் தோழமை கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
குளச்சல் முஹல்ல தலைவர் பஷீர் கோயா தலைமை வகித்தார். திரளாக கலந்து கொண்ட மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு முதல் பள்ளிரோடு, பெரியபள்ளி சந்திப்பு, அக்கரைப்பள்ளி சாலைவரை கைகோர்த்து நின்றனர்.
அப்போது அவர்கள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என கோஷம் இட்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மார்க்கிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, இந்தியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நசீம், தமுமுக பிரமுகர்கள் அன்வர் சதாத், சுலைமான், நகர எஸ்.டி.பி.ஐ. தலைவர் நிஷார், தவ்ஹீத் ஜமாஅத் நிசார் கபீர், ஜாக் ஹபீப் பிர்த்ஹவுசி, முஹல்ல ஜலாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நகரமன்ற முன்னாள் தலைவர் நசீர், நகர திமுக பொறுப்பாளர் ரகீம், மனித நேய மக்கள் கட்சி அமீன், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சாலிம், ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட தலைவர் சுசீலா உள்பட பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments