header ads
header ads
குளச்சல் போர் (Battle of Colachel) என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும். கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு ஆற்றியது.

போருக்கான காரணங்கள்:
மார்த்தாண்ட வர்மா தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காகப் பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த தேசிங்க நாடு நெடுமங்காடு அரசுகள் மீது மார்த்தாண்ட வர்மா போர் தொடுத்ததால் டச்சுக்காரர்களின் வணிகம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. எனவே 1739 முதல் தேசிங்கநாடு பகுதியில் டச்சுப் படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர்.

header ads

Latest News

View all
குமரியில் கடல் அரிப்பு: ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்
நாசா செல்ல தேர்வாகிய குளச்சல் மாணவி நிதியில்லாததால் அரசு உதவ கோரிக்கை
குறும்பனையில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்
குளச்சல் வணிக வளாகத்தில் தீ விபத்து
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நாளை (பிப்ரவரி 12) மனித சங்கிலி